ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன் அரிசி, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு 5% வரி போடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதனை எதிர்த்து அரிசி ஆலைகள், சில்லறை விற்பனை கடைகள் வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தன. இதையும் மீறி ஜிஎஸ்டி வரி அரிசி மீது போடப்பட்டுள்ளது.
அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியால் உணவகங்களில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் விலை 5% உயர்த்த போவதாக ஓட்டல்கள் அறிவித்துள்ளன.
ஏற்கனவே டீ, காபி, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகளுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. அரிசியின் மீதான ஜிஎஸ்டி வரியால் மேலும் விலை உயரும். இதனால் ஓட்டல்களில் வந்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து ஓட்டல் தொழில் நஷ்டமடையும் நிலைக்கு போகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கேஸ் விலை, மளிகை பொருள்கள் விலை உயர்ந்துவிட்ட நிலையில் அரிசியின் மீதான ஜிஎஸ்டி ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
Hits: 2