Thu. Oct 6th, 2022

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ” தமிழகத்தில் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார் . தமிழகத்தை விட அண்டை மாநிலங்களில் மின் கட்டண உயர்வு அதிகமாக உள்ளதாக அவ்வப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார் . அண்டை மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேசுவதற்கு பதிலாக , வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த அரசு சிறந்த அரசாக இருக்க வேண்டும் . பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக , தற்போது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்ற அரசாக மக்களை வாட்டி வதைக்கிறது . ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் , தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகும் . நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் என்பது சாதாரணம் . இது மட்டுமல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்திற்கு ஆளாக்கப்படுவார்கள் .

மேலும் இந்த மின் கட்டணம் உயர்வு வீட்டு வாடகையை உயர்த்தவும் வழிவகுத்துள்ளது . ஏற்கனவே பெட்ரோல் – டீசல் , சமையல் கியாஸ் விலை , சமையல் எண்ணெய் உள்பட உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது . மற்றொரு புறம் மின் கட்டணம் உயருகிறது . இதனால் சாமானிய மக்கள் மேலும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு , மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை மக்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்து தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் . “

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.