Thu. Dec 1st, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்தலில் இருந்து விலக்கு கோருகிற சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதா ? அதனுடைய தற்போதைய நிலை என்ன ? ஒப்புதல் வழி முறையில் என்ன முன்னேற்றங்கள் ? என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படும் ? என்று கேட்டு இருந்தேன் .

அதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார் .

” தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும் , குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் ” தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021 ” அனுப்பியுள்ளார் . உள்துறை அமைச்சகத்திற்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது .

தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும் , குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை . அது போன்று ஒன்றிய அமைச்சகங்கள் / துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளது . ஒன்றிய சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம் , ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் தங்களின் கருத்துக்களை அளித்து விட்டன . அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்து கொண்டு கருத்துக்களை / விளக்கங்களை கேட்டுள்ளோம் . இது போன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும் ; ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது . “

கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது . கவர்னர் கடத்திய காலமே அதிகம் .

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது தமிழகத்தின் குரல் . அது வெல்லும் ! வெல்லும் வரை நம் முயற்சிகளை தொடர்வோம் .”

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.