Thu. Dec 1st, 2022

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இன்னொரு உயிர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூதாட்டத்தால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? சட்டம் கொண்டுவருவதற்கு குழு அமைத்தார்கள்; அவர்களும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.

எப்போது இதற்கான தீர்வு காணப் போகிறார்கள்? இனியும் தாமதம் வேண்டாம். உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.