Thu. Mar 28th, 2024

ராமநாதபுரத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் பதில் நடவடிக்கையாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பட்டியலையும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2008ல் தான் ஆர்பி உதயகுமார் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் ஆர்பி உதயகுமார். ஆனால் இன்று 5000 கோடிக்கு அதிபதி விரைவில் அவரின் சொத்து மதிப்பு வெளியிடப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜ்க்கு பதிலடியாக பேசிய ஆர்.பி.உதயகுமார் நான் ஓபிஎஸ் பற்றிய உண்மைகளை பேசினால் வெளியில் தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பினர் பதிலடியாக ஆர்.பி.உதயகுமார் தேவர் சமுதாயத்தில் பிறந்து தேவர் சமுதாயத்திற்கே துரோகம் செய்கிறார் என மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உதயகுமாருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரு போஸ்டரில் ” ஊமையாக கூட வாழு ! உதயகுமார் போல வாழாதே ! ” இப்படிக்கு அரசியல் பயணம் லீ என ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ராமநாதபுரம் பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *