Tue. Sep 27th, 2022

ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்போவதாக அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் பதில் நடவடிக்கையாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பட்டியலையும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2008ல் தான் ஆர்பி உதயகுமார் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் ஆர்பி உதயகுமார். ஆனால் இன்று 5000 கோடிக்கு அதிபதி விரைவில் அவரின் சொத்து மதிப்பு வெளியிடப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Hits: 17

Leave a Reply

Your email address will not be published.