Sat. Nov 26th, 2022

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” நீட் தேர்வு அச்சத்தால் பெஃரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் மாணவி நிஷாந்தி தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தகவலறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். நீட்விலக்கு மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் இந்திய ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே காரணம். இதனைக் கண்டித்து நாளை பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் இதில் பங்கேற்கிறார். நிஷாந்தியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களே நீட் தேர்வைக் கண்டு அச்சம் வேண்டாம். துணிவுடன் தேர்வை எழுத வேண்டுகிறேன். மருத்துவம் தான் படிக்க வேண்டுமென்பதில்லை.
வேறு பாடங்களைப் படிக்கவும் அணியமாக இருக்கவும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். “

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.