Sat. Sep 24th, 2022

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம் எல் ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பள்ளி விடுதியில் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் கழுத்தில் உள்ள காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. 3வது மாடியிலிருந்து மாணவி குதித்ததாக காட்டப்பட்ட இடத்தில், குதித்ததற்காக எந்த தடயங்களும் இல்லை.

இதனையடுத்து, தாய் செல்வி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், சக மாணவிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். விடுதி காப்பாளர், பள்ளி தாளாளர் ரவிக்குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஆகியோர் முன்னிலையில், வீடியோ பதிவுடன் மாணவி ஸ்ரீமதியின் உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும்.”

Hits: 58

Leave a Reply

Your email address will not be published.