Fri. Mar 29th, 2024

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக அதிகமான தொல்லைகளை சந்தித்து வருகின்றனர்.

தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமான அங்கிகாரம் உள்ள நிலையிலும் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றனர்.

தாய்லாந்தில் கடந்த 10 ஆண்டுகளில் 16000 குற்றவாளிகள் விடுதலை ஆகி உள்ள நிலையில் அதில் 4000 நபர்கள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே குறைந்த காலங்களில் பாலியல் குற்றங்களில் மீண்டும் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

தாய்லாந்து நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கும் சட்டம் கொண்டுவர முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. மேலும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *