Tue. Sep 27th, 2022

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. மேலும் இணைவேந்தரை கேட்காமலே பட்டமளிப்பு விழாவில் யாரை பேச அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரச்சாரமாகவே தெரிகிறது. பட்டமளிப்பு விழாவிற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை கவுரவ விருந்தினராக அழைத்தது ஏன்?. ஆளுநர் வரலாற்றை தெரிந்திருக்க வேண்டும். ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் ‘Humanism’ என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.