தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “1974க்கு பிறகு கர்நாடக அரசு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கியதில்லை. இந்த நிலையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்டினால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர், முற்றாக நிற்றுப் போய் விடும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழர்களின் குமுறல். கடந்த காலங்களில், ஒன்றிய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் வரும் துணை ஆறுகளில் கபினி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என நீர்தேக்கங்களை கட்டியதன் காரணமாகவே, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர் குறைந்தது. தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் கர்நாடகம், ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.”
Hits: 5