Sat. Sep 24th, 2022

நாக்பூரைச் சேர்ந்த அஜய் பார்டேகி 28 தனது காதலியிடம் உடலுறவு ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்தவாடாவை சேர்ந்த செவிலியர் ஆன 23 வயது பெண்ணும் அஜய் பார்டேகியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இது இரு குடும்பத்தினருக்கும் தெரியும். இருவரும் பேஸ்புக்கில் சந்தித்துள்ளனர். காதலியின் தாயிடம் சந்தித்து திருமண விஷயமாக பேசியுள்ளார். இந்த ஜோடி எதிர்காலத்தில் திருமணம் செய்வது உறுதியாகி இருந்தது.

போலீசார் கூறுகையில் “மாலை 4 மணி அளவில் இருவரும் லாட்ஜுக்கு சென்றதாகவும் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் படுக்கையில் நெருக்கமாக இருந்தபோது அஜய் பார்டேகி சரிந்ததாகவும் அந்த தகவலை லாட்ஜ் நிர்வாகத்திடம் அந்தப் பெண் தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது எந்த வித சலனமும் இல்லாமல் இருந்த அவரை மருத்துவனை கொண்டு சென்றனர் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனையில் மாரடைப்பை மரணத்திற்கு முதன்மையான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்சோதி கூறுகையில் ” உடலுறவு கொள்ளும்போது மரணம் அரிது ஆனால் சாத்தியம் என்று கூறினார். கண்டறியப்படாத கரோனரி தமனி நோய் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கூட ஆபத்தானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் அதிக அடைப்புகளை கண்டு வருகிறோம். யாருக்காவது சிகிச்சை அளிக்கப்படாத கரோனரி தமனி நோய் இருந்தால் உடலுறவு போன்ற கடுமையான நடவடிக்கையின் போது அது அவரது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தை விட இப்போது மக்கள் தங்கள் இதயத்தை பாதுகாக்க அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

Hits: 45

Leave a Reply

Your email address will not be published.