தோழர் கருணா சக்தி அவர்களின் விமர்சன பார்வை :
ஒரு எளிமையான கதை பார்வையாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கக் கூடிய சாத்தியத்தை தாங்கி வந்திருக்கிறதென்றால் நிச்சயமாக அது ஒரு மிகச்சிறந்த முயற்சி. மலையாளத் திரையுலகில் மட்டுமே காணக்கிடைக்கின்ற அந்த அற்புதத்தை தமிழில் #Kathir ஈடு செய்திருக்கின்றது.
கீழ்வெண்மணி கம்யூனிஸ்ட் தோழர்களின் பங்களிப்பை பிளாஷ்பேக் காட்சிகளுக்காக சற்றே மாற்றி எடுத்துக்கொண்ட விதம் அழகாகவே இருந்தது. கோவை பகுதியை மையமாக கொண்ட தமிழ்படங்கள் அதிகளவில் வரத் துவங்கியிருக்கின்றன. அப்படி வந்ததில் இந்தப்படமும், சேத்துமானும் சிறந்தவைகள்.
Hits: 0