பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை ஹைதராபாத் வந்தார். அவரை மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார். ஆனால் சம்பிரதாய வழக்கத்தின் படி மாநிலத்துக்கு வந்த பிரதமரை வரவேற்பதற்கு மாநில முதல்வர் சந்திரசேகர் செல்லவில்லை. இதற்கு முன்பும் அவர் இரண்டு முறை பிரதமரை வரவேற்கும் நிலையில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
பிரதமர் நரேந்திர மோதி ஜூலை மூன்றாம் தேதி மாலை நடக்கும் பொது கூட்டம் மற்றும் பேரணியில் உரையாற்ற உள்ளார். அந்த மைதானத்திற்கு செல்லும் பாதையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் அருகே பை பை மோடி என்ற வாசகத்தின் பெரிய போட் வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பது, மத்திய பொதுத்துறை விற்பது, வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்துவது போன்ற பிரதமரின் தோல்வியுற்ற வாக்குறுதிகள் குறித்தும் அந்த விளம்பரப் பலகைகளில் கேள்வி எழுப்பப்பட்டன. மேலும் வேறு சில பகுதிகளில் மிகவும் மோசமான வார்த்தைகளால் பிரதமர் மோதியை கேலி செய்யும் பேனர்கள் நிறுவப்பட்டன.






Hits: 2