Sat. Apr 20th, 2024

இந்திய அணியும் அயர்லாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 104 (57) ரன்கள் அடித்தார். அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ பால்பிர்னி 60 (37) ரன்கள் அடித்தார்.

டி20 போட்டிகளில் 2-0 கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *