Sat. Sep 24th, 2022

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உயிரை பணயம் வைத்து ராணுவத்தினர் பணி செய்துவருகின்றனர்.

நாட்டிற்காக தியாகம் செய்பவர்களுக்கு அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அறிவித்த சலுகைகளை போல அக்னிபாத் வீரர்களுக்கும் இதே போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு துறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசின் பாதிக்கும் மேற்பட்ட துறைகள் முன்னாள் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. முன்னாள் ராணுவ வீரர்கள் சரியான முறையில் நிரப்பப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் மத்திய சிவில் துறையில், வங்கிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றில் இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க கடந்த ஜூன் இரண்டாம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மொத்தம் 77 ஒன்றிய அரசுத்துறைகள் இருக்கும் நிலையில் அதில் 47 துறைகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்வது இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த முக்கியமான கூட்டத்தில் வர்த்தகம், விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி, அணுசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், சாலை போக்குவரத்து, சட்டம் மற்றும் நீதி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல சுமார் 60 சதவீதம் அரசுத்துறைகளில் எத்தனை சதவீதம் முன்னாள் ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ள எந்த குறிப்புகளும் வழங்கப்படவில்லை.

மேலும் அணு ஆராய்ச்சித் துறை, விவசாயத்துறை தொடங்கி மொத்தம் இருக்கும் 77 துறைகளில் 45 துறைகள் முன்னாள் ராணுவத்தினரை வேலைக்கு எடுத்துள்ள முழு விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.

அதாவது முன்னாள் ராணுவ வீரர்கள் அனைத்து அரசுகளும் குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் அதை பல துறைகள் முறையாக பின்பற்றவில்லை.

மத்திய பாதுகாப்புத்துறை அக்னிபாத் என்ற புதிய திட்டத்தில் வேலை செய்பவர்கள் 4 ஆண்டுகளுக்கு பின்பு பிரிவு விடுவிக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு துறையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Hits: 23

Leave a Reply

Your email address will not be published.