தோழர் கர்ணா சக்தி அவர்களின் திரைவிமர்சனம் :
சுந்தரத் தெலுங்கில் வெண்ணெலா (வெண்ணிலா) சுவரில் வரையப்பட்ட அரிவாள், சுத்தியல் சின்னத்தைச் சுற்றி இதயம் வரையும் காதல் யட்சி. தீவிரமான காதலும் ஒரு வகை புரட்சிதான். அதைத்தான் வெண்ணிலா இறுதிவரை நெஞ்சம் நிறையச் செய்கிறாள்.
ஆந்திராவின் வராங்கல் பகுதியைச் சார்ந்த சரளா என்பவரின் உண்மைக்கதை என இறுதியில் செய்தித்துணுக்குகள் காட்டப்படுகின்றன. அதற்கு முன்பே நமக்கு நெகிழ்வுடன் சரளாவின் ஒரு நீண்ட நெடிய காதல் பயணத்தை வெண்ணிலாவாக திரையில் வாழ்ந்து காட்டுகிறார்.
போருக்கு நடுவே பூக்கும் வெண்ணிலாவின் பிறப்பு சம்பந்தமான ஆரம்பகாட்சிகள் அற்புதமானது. அதிகாரம் மற்றும் நக்சல் படையினரின் வர்க போராட்டத்திற்கு நடுவே சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாக காதல் சுமந்தலையும் வெண்ணிலாவின் இந்தக் கதை சிறப்பானது. இடதுசாரி மனங்களுக்கு பிடித்தமானது.
Hits: 27