இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இன்று இந்தியாவுடன் நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 (27) ரன்களும், ஹர்டிக் பாண்டியா 46 (31) ரன்களும் எடுத்தனர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hits: 7