மதுரை : தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தழைத்தோங்கி பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் , ஓபிஸ் – க்கு ஆதரவாக அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்துவாருங்கள் ஓபிஎஸ் அவர்களே , அம்மாவின் தவப்புதல்வன் என்ற வாசகத்துடன் ஓட்டப்பட்ட கலர் போஸ்டர்கள் திருமங்கலம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் அலுவலகத்தை சுற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Hits: 15