தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் எண்ணிக்கையின் அடிப்படையில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்றும் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், மாணவர்கள் சேர்க்கையில், ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 விழுக்காடு இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது கண்டனத்துக்குரியது.
இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, ஆர்.எஸ்.எஸ்- சின் ஆதரவாளர் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு துணைபோகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
Hits: 4