உத்தரபிரதேசம்: கலவரத்தில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சட்டவிரோதமாக புல்டோசர் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தடை கோரி
ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் “சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது உரிய சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். மேலும் வீடுகள் இடிப்பு தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.”
Hits: 5