Tue. Sep 27th, 2022

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் பாஜகவின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது ” பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி இழிவாக பேசுவதை அதிமுகவை சேர்ந்த ஓபிஸ்,ஈபிஸ் நிறுத்தி கொள்ள வேண்டும். நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மக்கள் தெரிந்து கொண்டு இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். மேடையில் அவர் பேசி கொண்டிருக்கையில் கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து சென்றார். இதனைக்கண்டு கோபமுற்ற நடிகர் ராதாரவி ” பாஜகவிற்கு ஒட்டு போடுங்க…ஒட்டு போடாமல் கூட போங்க..ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் நான் 2 படங்கள் நடித்து சம்பாதித்து விடுவேன்” என கூறினார். நடிகர் ராதாரவியின் பேச்சை கேட்ட பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.