Tue. Sep 27th, 2022

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் அவரது 136 வது பிறந்த நாளையொட்டி , அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்டத்தில் தனது நாடக கலை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு அளித்த தியாகி விஸ்வநாததாஸ் – க்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் , அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாக அரசுடைமை ஆக்கியது. அன்று முதல் அவரது நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அவரது இல்லத்தில் அவர் வாழ்ந்த வரலாற்று சின்னங்கள் குறித்து புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.