Tue. Sep 27th, 2022

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இன்று இந்தியாவுடன் மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகபட்டணத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் ஜெய்க்வாட் 57 (30) ரன்களும், இஷான் கிசான் 54 (35) ரன்களும் எடுத்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளும், சாஹல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.