தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “2009 ஆம் ஆண்டு,இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும்,அதிகாரமும் தலை தூக்கத் தொடங்கியது. ஈழத்தில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்களும்,சிங்கள ராணுவமும் குடியமர்த்தப்பட்டன தமிழர்களின் வழிபாட்டு தலங்கள்,புத்த விகாரைகளாக மாறியது.
தமிழர்களின் வழிபாட்டிடமான செம்மலை நீராவியடிப்பிள்ளையார் இன்று பௌத்தர்களின் விகாரைகளாக வேரூன்றியிருக்கின்றது. நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு, இன்று பௌத்தர்களின் இராஜ்ஜியமானது. இப்போது குருந்தூர்மலையிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு கோயில்கள் என்பதை தாண்டி, தமிழர்களின் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று எச்சங்கள் நிறைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”
Hits: 5