தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது, உற்பத்தி செலவு, நிலமதிப்பு, குடும்ப பாதுகாப்பு பராமரிப்பு செலவு மற்றும் இதற்குரிய வட்டியையும் சேர்த்து உற்பத்தி செலவாக கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து வழங்கிட வேண்டும். இது தான் வேளாண் கமிஷன் பரிந்துரையாகும்.
ஒன்றிய அரசு வேளாண் விளைபொருள் மற்றும் உற்பத்திக்கான செலவு திட்டமிடல் குழு பரிந்துரையை ஏற்று, விவசாய விளைபொருட்களுக்கு நிகழாண்டைவிட 3 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே விலையை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும்.
விவசாய விளைபொருட்களுக்கு நிகழாண்டைவிட 3 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே விலையை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, ஒப்பந்த அடிப்படையில் வேளாண் விளை பொருளுக்கு ஏற்ப விலையை உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”
Hits: 2