Tue. Sep 27th, 2022

ராமநாதபுரம் எம்.பி. எம்.பி நவாஸ்கனி அறிக்கை “பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிகிறது ., உலகிலுள்ள இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் உத்தம நபிகள் நாயகம் அவர்கள் குறித்து அவதூறாய் விஷக் கருத்துக்களை தெரிவித்த பாஜகவினர் மீது கட்சியிலிருந்து நீக்கம் என்ற மிகச் சாதாரண நடவடிக்கை மட்டும் போதாது அவர்கள் புண்படுத்தியது உலகம் முழுவதும் வாழ்கின்ற கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் உணர்வுகளை.
விசம குணம் படைத்த அயோக்கியர்கள் சட்டத்தின் அடிப்படையில் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பாஜகவின் இந்த வெறுப்பு பிரச்சாரத்தால் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு…

கண்துடைப்பு நடவடிக்கை இல்லாமல், கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற விஷக் கருத்துக்களை தெரிவிப்பதை பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.”

Hits: 17

Leave a Reply

Your email address will not be published.