கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளம் பெண்கள், 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.”
Hits: 28