Sat. Sep 24th, 2022

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை ‘மாநில சுயாட்சி நாளாக’ நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர்.

இந்நாளில் கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம்”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.