Mon. Dec 4th, 2023

ஒரு அசுரத்தனமான உன்னத தலைவனின் உழைப்பு

இந்த பிரம்மாண்டதொகுப்பு அசத்தலானது

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர் #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.

பின்வரும் துறைகளில் கலைஞரின் சாதனைகள்:

தண்ணீர்
உணவு
உடை
உறைவிடம்
மொழி
மருத்துவம்
கல்வி
பாதுகாப்பு
சாலைவசதி
மின்சாரம்
போக்குவரத்து
உள்கட்டமைப்பு
தொழிற்சாலை
தொலைத்தொடர்பு

தண்ணீர்/ Water:

  1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
  2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர்
  3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்
  4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.
  5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி – குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்
  6. தாமிரபரணி – கருமேனியாரு – நம்பியாரு நதி இணைப்பு திட்டம்
  7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
  8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
  9. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்
  10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம்.
  11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
  12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரித்து வந்தார்.

உணவுமற்றும்விவசாயம்/ Food and Agriculture:

  1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது கலைஞர்
  2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தார்.
  3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர்.
  4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்
  5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர் ..
  6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக,10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர் கலைஞர்
  7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
  8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
  9. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
  10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்
  11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்
  12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்
  13. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தியது கலைஞர்
  14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியது கலைஞர்
  15. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்
  16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது கலைஞர் உறைவிடம்/ HOME
  17. கிராமங்களில்,நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியவர் கலைஞர்
  18. தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுத்தவர் கலைஞர்
  19. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட்வீடு திட்டம் வகுத்தது கலைஞர்
  20. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
  21. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
  22. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர் ..

மருத்துவம்/ Healthcare:

  1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்,13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். மேலும் மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள்,தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர்.
  2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர்
  3. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்
  4. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர்
  5. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர்
  1. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மருத்துவ கல்லூரிகளை அமைத்தது கலைஞர்…
  2. மருத்துவ கல்லூரிகளில் பல துறைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர்.
  3. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்
  4. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான “நலமான தமிழகம் திட்டம்” தந்தது கலைஞர்..
  5. ஒன்றிய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்

கல்வி/ Education:

  1. 1996 – 2001 காலகட்டத்தில் 7,000 பள்ளிகளை நிறுவியது.
  2. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்
  3. மிக பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்..
  4. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
  5. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர்
  6. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது கலைஞர்…
  7. 10ம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு திருமண உதவி 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர்
  8. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர்
  9. வருமான உச்ச வரம்புக்கு கீழுள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசகல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
  10. விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்
  11. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்
  12. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் ..
  13. சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்
  14. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
  15. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
  16. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர் …
  17. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்
  18. முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீடு அளித்தது கலைஞர்
  19. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர்
  20. உருது அக்காடமி தந்தது கலைஞர்
  21. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர்
  22. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது கலைஞர்
  23. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000…பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்
  24. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்
  25. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்
  26. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்
  27. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்
  28. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்
  29. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்
  30. பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர்…
  31. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்
  32. உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும் என்ற திட்டமிட்டு, முதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி , பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர் கலைஞர்..

மொழி/ Language:

  1. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்
  2. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்
  3. திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர்…
  4. பாரதிதாசன், அண்ணாவுடன் சேர்ந்து நாம் இன்று ஷ,ஸ,க்ஷ கலக்காமல் எளிய தமிழை வழங்கியவர்
  5. திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தியவர் கலைஞர்.

பாதுகாப்பு/ Police:

  1. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்…
  2. மகளிர் காவலர்களை நியமித்தவர்
  3. சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர்
  4. புழல் சிறைச்சாலை கட்டியவர்

சாலைவசதி/ Road and Rail:

  1. 1,000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை அமைத்தது கலைஞர்
  2. .கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட்சாலை அமைத்தவர் கலைஞர்..
  1. மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்
  2. சென்னை – மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்….

போக்குவரத்து/ Transport:

  1. போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கலைஞர்
  2. பேருந்துகளை நாட்டு உடமயமாக்கியவர் கலைஞர்
  3. கிராமங்களில் சிறிய பேருந்து சேவையை கொண்டுவந்தது கலைஞர்
  4. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கிய கலைஞர்..
  5. பேருந்து கட்டணத்தை ஏற்றாமல் 13,000 புதிய பேருந்துகள் வழங்கியவர் கலைஞர்

மின்சாரம்/ Electricity:

  1. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
  2. நெய்வேலி இரண்டாம் அலகு அனல் மின்நிலையம் கொண்டுவந்தது கலைஞர்
  3. தூத்துக்குடி அனல்மின் நிலையம்..
  4. எண்ணூர் அனல்மின் நிலையம் 3, 4வது அலகு
  5. காடம்பாறை நீர் மின் நிலையம்.
  6. காற்றாலை மின்சாரம் ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்.
  7. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்
  8. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின் வழித்தடம்…

தொழிற்சாலைமற்றும்வேலைவாய்ப்பு/ Industries and Job Opportunities:

  1. SIPCOT உருவாக்கியது கலைஞர்
  2. SIDCO உருவாக்கியது கலைஞர்
  3. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
  4. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர் ..
  5. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
  6. தொழிற்சாலைகளுக்கு வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்
  7. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்
  8. Automobile companies, Automobile testing centres உருவாக்கியது கலைஞர்…
  9. Electronic manufacturing companies, Saint Gobain கண்ணாடி தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர்
  10. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்
  11. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர் ..
  12. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை ஈர்த்து 41,090 கோடி முதலீடை கொண்டு வந்தவர் கலைஞர்.
  13. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்
  14. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் ….
  15. 13,000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்
  16. முதல் முறையாக 10,000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்
  17. TNPSC உருவாக்கி,அண்ணன்,தம்பி,மாமன், மச்சான்களை வேலையில் அமர்த்தியதை தடுத்து,முறையாக எல்லோருக்கும் பணி கிடைக்க வழி செய்தவர் கலைஞர்..

அரசுகட்டிடங்கள்/ Government Buildings:

  1. மதுரை நீதிமன்றம் உட்பட 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்
  2. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்
  3. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர் ….
  4. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்
  5. 420 பேரூராட்சிகள் உருவாக்கி “அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்” தந்தது கலைஞர்
  6. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்…
  7. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்
  8. சென்னையில் 20 மேம்பாலங்கள் மற்றும் 200 அடி வெளிவட்ட சாலை உருவாக்கியது கலைஞர்
  1. 21மாவட்டங்களில் புதிய மாவட்டஆட்சியர் அலுவலகங்கள், தாலுக்கா மற்றும் யூனியன் கட்டிடங்களை கொடுத்தவர் கலைஞர்
  2. ஆசியாவிலே மிகபெரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைத்தது கலைஞர்
  3. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உட்பட பல புதிய பேருந்துநிலையங்களை நிறுவியவர் கலைஞர்

கோவில்திருப்பணிகள்/ Temple:

  1. 1.Hydraulic வசதி செய்துகொடுத்து திருவாரூர் தேரை மீண்டும் ஓட வைத்தவர் கலைஞர்
  1. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்
  2. கோவில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம்” தந்தது கலைஞர்
  3. பல கோடி செலவில் 5,824 கோவில்கள் புணரமைத்து குடமுழுக்கு பணி செய்தது கலைஞர்
  4. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர்..

சமூகபணிகள்/ Social Welfare Schemes:

  1. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்
  2. கையில் இழுக்கும் ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்
  3. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென வாரியம் அமைத்தது கலைஞர்…
  4. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
  5. அரசியலமைப்பில் BC – 31%, SC – 18 % ஆக உயர்த்தியது கலைஞர்
  6. மே 1,சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவித்தது கலைஞர்
  7. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்..
  8. அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம் தந்தது கலைஞர்
  9. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
  10. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
  11. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்களுடன் சேர்த்தது கலைஞர்..
  12. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
  13. மனுநீதி திட்டம் தந்தது கலைஞர்
  14. வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோர் பட்டியலில் இணைத்தது கலைஞர்
  15. மிகபிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், பிரமலைக்கள்ளர் மற்றும் சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்..
  1. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
  2. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
  3. பழங்குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
  4. தகப்பன் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்..
  5. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
  6. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
  7. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
  8. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்…
  9. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
  10. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்
  11. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவர் கலைஞர்.
  12. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
  13. மெட்ராஸ் என்ற பெயரை சென்னையாக்கியது கலைஞர்
  14. சமத்துவபுரம் தந்தது கலைஞர்
  15. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்
  16. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்
  17. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்..
  1. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்தது கலைஞர்
  2. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர்
  3. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்
  4. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர்
  5. நலிவுற்ற குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்..
  6. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்
  7. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
  8. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
  9. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் ..
  10. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்
  11. பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்

கலைஞர் அரசியல்வாதி அல்ல வரலாறு

அவர் ஆட்சி காலத்தில் இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த மக்கள் நலதிட்டங்கள் அதிகம் இருக்கிறது

Hits: 256

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *