பாரீஸ் : கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சும், நம்பர் 5 வீரர் நடாலும் மோதினர்.
முதல் செட்டை 6-2 என்ற விகிதத்தில் கைப்பற்றினார் நடால். இரண்டாவது செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றி நடாலுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தார். மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றி நடால் முன்னேறினார். நான்காவது செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். நான்காவது செட்டை 7-6(7-4) என நடால் கைப்பற்றினார். முடிவில் 6-2, 4-6,6-2,7-6(7-4) என செட்டை கைப்பற்றி நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 12 நிமிடம் நடைபெற்றது.
Hits: 16