அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 42-வது இடத்தையும் பெற்றிருக்கும் கோவை வேளாண் பட்டதாரியான செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தனது விடாமுயற்சியால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (IAS) என்ற கனவை எட்டிப் பிடித்திருக்கும் சுவாதி ஸ்ரீ மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.
UPSC தேர்வில் வென்ற அனைவரும் ஆட்சிப்பணி பொறுப்பில் சமூக அக்கறையோடும் மக்கள் மீது தனித்த அன்போடும் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”
Hits: 4