லண்டனில், இந்தியா ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட அலுவலத்தில் தீவிரவாத செயலுக்கு 1910 ஆம் ஆண்டில் கைது செய்ய பட்டு இந்தியாவிற்கு வரும் வழியில் பிரான்ஸ் நாட்டு மார்ஸிலேஸ் துறைமுகத்தில் கப்பலில் இருந்து குதித்து தப்பிக்க மீண்டும் பிடிபட்டு இங்கிலாந்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா வந்த உடன் 1909 ஆம் ஆண்டு நாசிக் ஜில்லா கலெக்டர் AMT ஜாக்சன் என்பாரை கொன்ற நபர்களுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாகவும், மற்றும் ஆங்கில அரசு மீது போர் தொடுத்ததாகவும் 50 வருடம் கடுங்காவல் தண்டனை பெற்று அந்தமான் செல்லுலர் சிறையில் 1911 இல் அடைக்கப்பட்டார்.
1911 ஆம் ஆண்டு ஜீலை 11 ஆம் தேதி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 அம தேதி தனது முதல் மன்னிப்பு கடிதத்தை பிரிட்டிஷாருக்கு எழுதினார்.அதன் பிறகு 9 ஆண்டுகளில் 6 முறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டபோது 112 பவுண்டுகளாக இருந்த அவரது எடை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவரது 126 பவுண்ட் ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிந்த்ர கோஷ் என்ற கைதி கூறியதாவது ” சிறைக்குள் இருந்த சாவர்க்கர் சகோதரர்கள் எங்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்தங்கிவிடுவார்கள். சிறைக்குள் இருந்தபோது சாவர்க்கர் சகோதரர்களுக்கு எந்த கடின வேலைகளும் அவர்களுக்கு தரப்படவில்லை” என்று குறிப்பிட்டுருந்தார்.
மேலும் அவர் பிரிட்டிஷார் அரசாங்கம் தன் மீது கருணை காட்ட வேண்டும் என்றும் , தன்னை இந்தியாவில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு அவர் அரசாங்கத்திற்கு பணியாற்ற தயாராக இருந்தார்.
நிரஞ்சன் தக்லே சாவர்க்கர் பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார். அதில் காந்தி,காங்கிரஸ், மற்றும் முஸ்லீம்களை எதிர்ப்பதற்கு அதே நோக்கத்தை கொண்டிருந்த வைஸ்ராய் லின்லித்கோவுடன் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் ஆங்கிலேயர்கள் மாதம் 60 ரூபாய் பென்ஷனாக சாவர்க்கருக்கு கொடுத்து வந்தனர். அவருக்கு மாத ஒய்வூதியம் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களுக்கு அவர் என்ன சேவை செய்தார். இப்படிப்பட்ட ஒய்வூதியம் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
மேலும் 1949ல் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர்களில் சாவர்க்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.
Hits: 19