Thu. Dec 1st, 2022

15 வது ஐபிஎல் சீசன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் அகமதாபாத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களுர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஜத் படிடார் 58 (42) ரன்கள் எடுத்தார்.ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் 3 விக்கெட்டும், ஒபெட் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் தனது அதிரடியால் 18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் மோதவுள்ளது.

Hits: 14

Leave a Reply

Your email address will not be published.