Tue. Sep 27th, 2022

தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும் என பணம் கேட்டு மிரட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை

“சென்னையில் ‘ ஜி ஸ்கொயர் ‘ என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் என்பவர் கடந்த 21.05.2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் .

அப்புகாரில் , கெவின் என்பவர் , ‘ ஜி ஸ்கொயர் ‘ நிறுவனம் குறித்தும் , அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா ( எ ) ராமஜெயம் குறித்தும் ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும் . சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி , பணம் கேட்பதாகத் தெரிவித்து , நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார் .

இந்த புகாரின் அடிப்படையில் , மயிலாப்பூர் காவல் நிலைய குற்ற எண் .221 / 2022 – இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு , வழக்கின் முதல் குற்றவாளி கெவின் கடந்த 22.05.2022 அன்று கைது செய்யப்பட்டார் . இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது . இதன்படி , கெவின் என்பவர் 50 இலட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் புலனாயிற்று . அதேபோன்று . அப்பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன . இதற்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது .

எனினும் , இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது . அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .”

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.