Tue. Sep 27th, 2022

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாஜக பாலச்சந்தர் . இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல்துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பாஜகவின் மத்தியசென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவராக பாலச்சந்தர் உள்ளார். இதற்கு முன்னர் இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது மாட்டு தலையை இவரே இவரது அலுவலகத்தில் போட்டுகொண்டு மதக்கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்தார் என்ற வழக்கும் மேலும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பிரகாஷ் என்பவரை மிரட்டி பணம் கேட்ட வழக்கும் உள்ளது.

மேலும் போலீஸ் பாதுகாப்புக்காக தன்னை பிறமதத்தினர் 2 முறை தாக்கியதாக பாலச்சந்தர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது கலவரத்தை தூண்டுதல் உட்பட 5 வழக்குகள் போடப்பட்டது.

2019 ம் ஆண்டு காவல்துறை இவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டபின் பாஜகவில் இணைந்து கொண்டார். சென்னை சிந்தாதிரிபேட்டையில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது தொடர்பாக சிலருடன் இவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் உட்பட சிலரை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.