பட்டா/சிட்டா :
ஒரு நிலத்தின் மீதான உரிமையாளர் யார் என்று வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். அந்த ஆவணத்தில் நிலத்தின் உரிமையாளர் பெயர் , நிலத்தின் அளவு, புல எண், எந்த மாவட்டம் , எந்த தாலுகா , எந்த கிராமம், நன்செய் நிலம் or புன்செய் நிலம் என அனைத்து குறிப்புகளும் கொண்டது.
பட்டா/சிட்டா டவுன்லோட் செய்வது எப்படி:
- தமிழ்நாட்டு அரசின் சார்பில் செயல்படும் https://eservices.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்
- இணையதள பக்கத்திற்கு சென்று பட்டா/சிட்டா பார்வையிட என்று உள்ளதை கிளிக் செய்யவேண்டும்.
- கிளிக் செய்தவுடன் அதில் கேட்கப்படும் தகவல்களான எந்த மாவட்டம், வட்டம்,கிராமம் என்பதை சரியாக உள்ளிட வேண்டும்.
- மேலும் புல எண் அல்லது பட்டா எண்ணை சரியாக உள்ளிட வேண்டும். கட்டத்தில் காமிக்கப்படும் captcha வை சரியாக உள்ளிட்ட பின் சமர்ப்பி பட்டனை அழுத்த வேண்டும்.
- திரையில் பட்டா/சிட்டா தோன்றும் அதனை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது சேமித்து வைத்து கொள்ளலாம்.
Hits: 8