Sat. Nov 26th, 2022

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு மேல் சட்டை அணியாமல் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வந்த நபர் தன்னை சிலர் நிர்வாணமாக தாக்கியதாகவும் தனது உள்ளாடையை காணவில்லை என்றும் புகார் கொடுக்க வந்ததால் சிறிது நேரம் சிரிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆலங்குளம் அடுத்த நாலாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கட்டிட வேலை பார்த்துவருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு போய்ட்டு தனது கிராமத்திற்கு வந்து மதுபானக்கடையில் புல்லாக குடித்துள்ளார். போதை தலைக்கேறியதால் என்ன செய்கின்றோம் என தெரியாமல் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளார். பின்பு காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி அவர் மனைவியை வரவழைத்து அவருடன் அனுப்பினர்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.