நல்லதை_பகிர்வோம் என்ற தலைப்பின்கீழ் ஆசிரியர் பரத் IIIT நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை தனது சமூக வலைத்தளத்தில் எழுதியது
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்துல (IIIT) பள்ளி மாணவர்களுக்கான ஒரு வார ரோபோடிக்ஸ், IoT, AI பயிற்சி வழங்கப்பட்டு அதன் நிறைவு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்தது. நெருங்கிய நபர் அழைப்பு என்பதால் போகவேண்டிய கட்டாயம். பள்ளி மாணவர்கள் என்றதும் எப்படியும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று யோசித்து சொன்றால் மொத்தம் ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் (25 பேர்) இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள் (7 பேர்) என எங்கு திரும்பினாலும் அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்கள் அனைவரும் கலந்து A-E வரை ஐந்து குழுக்களாகப்பட்டனர்.
இவர்களுக்கு ஒருவாரம் பயிற்சி தரப்பட்டு இன்று அவர்களுக்கு மதிப்பீடும் வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு குறித்து இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேசியபோது ,பயிற்சி தொடங்கிய போது நான் தமிழில் சொல்லி தர்ரேன் என்று சொன்னப்ப அரசு பள்ளி மாணவர்கள் பதில் no sir we are comfortable in English என்று சொன்னார்களாம். அத்தோடு அவர்களின் கற்கும் திறனும் நிறைய மேம்பட்டுள்ளதாக கூறினார். சில மாணவர்களை அவர் பேச அழைத்த போது அவர்களின் தடையில்லா ஆங்கிலமும் தமிழும் ரொம்பவே ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தது.
ஒரு பாப்பா தமிழில் பேசியதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த சில வேறு மாநில நண்பர்களும், IIIT இயக்குனரும் ஆரத்தழுவி பாராட்டினார்கள். அதன் ஒரு பகுதி கீழே. துளியும் மேடை பயமின்றி அந்த பாப்பா பேசுனது அரசுப்பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு சான்று.
சில வாரங்களுக்கு முன்பு அரசுப்பள்ளி மாணவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் வகையில் அவர்களின் ஆக்கம் இருந்தது. மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் தங்கள் தனித்திறமையான சிலம்பு சுற்றும் போது IIIT பதிவாளர் அந்த மாணவர்களிடம் இருந்த திறமை இன்னும் மேம்பட அவர்களால் ஆன உதவிகளைச் செய்து தருவதாக கூறினார்.
மேலும் இந்த சம்மர் ஒர்க்ஷாப்பை இனி டிசம்பர் மாத விடுமுறையிலும் நடத்திக் தருவதாக மாணவர்களிடம் கூறினார். என்னப்பா உரிய ஊக்கமும் ஆதரவும் தான் அரசுப்பள்ளி மாணவர்களின் ஒரே தேவை.
இது போன்ற இடங்களில் சென்று கற்று திரும்பும் மாணவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய பொருளுதவி கிடைத்தால் சர்வதேச அளவில் சாதிக்கும் திறமை அவர்களிடம் உண்டு. தேவையில்லாமல் அரசுப்பள்ளி மாணவர்களின் மீது சேற்றை வாரி இறைக்காமல் இது போன்ற நம்மாலான உதவிகளை செய்வோம்.
தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இது போன்ற செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிக்கவனம் எடுத்து செய்யலாம் எனவும் வேண்டுகிறேன். அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் செய்த தவறுகளை தீயென பரப்பிய நாம் இதுபோன்ற நல்ல விஷயங்களையும் பரப்புவோம்.
பிகு: இந்த பயிற்சியினை சிறப்பாக முடித்து அதற்கான சிறப்பு பரிசு பெற்ற 5 மாணவர்களில் நால்வர் அரசுப்பள்ளி மாணவர்கள்.
#EDUCATION
#EDUCATIONFORALL
Hits: 36