Thu. Oct 6th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 67 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 62 (47) ரன்னும், மில்லர் 34 (25) ரன்னும் எடுத்தனர்.பெங்களுர் அணி சார்பாக ஹேசில்வுட் 2 விக்கெட் கைப்பற்றினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய பெங்களுர் அணி 18.4 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கோலி 73 (55) ரன்னும், பாப் டுப்ளஸிஸ் 44 (38) ரன்னும், மேக்ஸ்வெல் 40 (18) ரன்னும் எடுத்தனர்.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.