Thu. Apr 25th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் – மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய #DravidianModel நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர்.இச்சாதனை தொடரும்! “

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *