Sat. Sep 24th, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் அவர்களுக்குக் எழுதியுள்ள கடிதம் “பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும் – அதை நம்பியுள்ள நெசவாளர்களும் , தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாகச் சுட்டிக்காட்டி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும் , நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும் ” மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் திரு நரேந்திரமோடி நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தார் . அதில் மிக முக்கியமாக தொழில்துறையிலும் , நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலையளிப்பதாகவும் , பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார் .

இந்நிலையில் ஈரோடு , திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது . பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது .

ஆகவே , இவற்றையெல்லாம் மனதில் கொண்டு- திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணை தலைவர் திருமதி கனிமொழி அவர்கள் தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சென்று மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் , ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களையும் நாளைய தினம் ( 18.5.2022 ) சந்தித்து நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார் .

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் , அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு , ஒன்றிய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் .”

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.