Fri. Mar 29th, 2024

தேசிய கல்விக் கொள்கை பற்றிய சிறிய அலசல் கட்டுரை கல்வியாளர் பரத் அவர்கள் எழுதியது

Academic bank of credits:
தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான தவறான Academic bank of credits நடைமுறைபடுத்த சுற்றறிக்கை வந்துடுச்சு. நல்லா விவரமா பேசுற பலரும் இது நல்லாத்தானே இருக்குனு சொல்றாங்க. ஐயா புண்ணியவான்களே இனி படிப்பு காசு இருக்கவனுக்கு மட்டும்தான்.

இப்ப வரை 300+ கல்வி நிறுவனங்கள் இதில் பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க

இதுல என்ன பிரச்சினை:

  1. 50% கிரிடிட் ஒரு காலேஜ்ல முடிச்சுட்டு மீதி இருக்க 50% எங்க வேணா ABC ல இருக்க காலேஜ்ல படிச்சுக்கலாம். பீகார் ல எதாவது குப்பை காலேஜ்ல காசு கட்டி பாதி படிச்சுட்டு இங்க நம்ம ஊர் யுனிவர்சிட்டி ல இருக்க வேக்கன்ட் சீட்ல வந்து சேந்து மீதி படிப்பான் நியாயமா அந்த வேக்கன்ட் சீட்ல நம்ம பையன்தான் இருக்கனும் ஆனா அவன் இருப்பான். சமூகநீதி காணாமல் போகும்.
  2. காசு இருக்கவன் ஒரு இடத்துலே படிக்கனும்னு நினைச்சா அந்த இடத்துலே தேவைக்கு ஏற்ப சீட்டுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தலாம். அப்பவும் வீணா போகப்போறது நம்மளோட ரிசோர்ஸ்.
  3. காசு கட்ட சிரமப்படும் பசங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வைத்து அந்த சீட்டுல காசு இருக்க எவனையாவது வந்து சேத்துப்பானுவ. ஏற்கனவே ஒன்றிய அரசு ஸ்காலர்ஷிப் ரத்து பன்னதால நிறைய பேர் படிப்பை பாதியிலேயே விட்ட சம்பவம் இங்க நடந்தது.
    இனி இது நிறைய நடக்கும்.
  4. 7 வருஷம் வரை உங்க கிரெடிட் செல்லும் அதுக்குள்ள படிச்சு முடிக்கலாம். இதனால ஒரு டிகிரி முடிக்குறதுல/ முடிச்சுட்டு வேலைக்கு போறதுல ஏற்படும் தடைகள் அதிகம். Drop outs ஜாஸ்தி ஆகும்.
  5. ஆன்லைன் கோர்ஸ் படிக்குறதும் கிரிடிட் ல அடங்கும். என்ன கிறுக்குத்தனம் பரிச்சைக்கு போகாம கோர்ஸ் பணம் கட்னாலே சர்டிபிகேட் கிடைச்சுடும்
  6. பணம் இருக்கவன் எதாவது டீம்டு யுனிவர்சிட்டி ல சேந்து கிரிடிட் கணக்கு காட்டி டிகிரி வாங்கி வேலைக்கு போய்டுவான் முக்கி முக்கி படிச்சவன் ரெஸ்யூம் தூக்கிட்டே சுத்தனும்.
  7. காலேஜ்ல திடீர்னு எங்க இருந்தாவது வந்து இங்க நம்ம கட்டமைப்பை நல்லா யூஸ் பன்னிட்டு நம்மளையே எத்துவான்.
  8. Skill based course சர்டிபிகேட் கோர்ஸ்னு டிகிரி தவிர்த்து வேலைக்கு தேவையான கோர்ஸ் மட்டும் படிச்சா போதும்னு நிலை வரும். இது கடைசி வரை ரொம்ப ஆபத்து. Ms office மட்டும் போதும்னு அதை மட்டும் படிச்சா கடைசி வரை டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராவே இருந்த சாகனும் அதைதான் இந்த ABC ஊக்கப்படுத்துகிறது.
  9. இங்க நீட் கொண்டு வந்து ஸ்டேட் கவர்ன்மென்ட் சீட்ட திருடி மத்த ஊர்காரனுக்கு தந்தமாதிரி
    இங்க இருக்க கலை அறிவியல் பொறியியல் சீட்டுகளும் கண்ணுக்கு முன்னாடியே களவாடப்படும்

மொத்தத்துல பணம் இருக்கவன், அதிகாரம் இருக்கவன் நினைச்ச இடத்துல படிக்க முடியும் தகுதியும் திறமையும் முறையான இட ஒதுக்கீடுகளின்படி படிக்க நினைக்குறவனுக்கு கல்வி மறுக்கப்படும். மறுபடியும் பழையபடி ஒரு குறிப்பிட்ட இனத்தைதவிர மீதி எல்லாம் skilled labour ஆ மட்டுமே இருப்போம்.

இந்த ABC ல சேராத மாநில பல்கலைக்கழகங்களுக்கு தரப்படும் நெருக்கடி மானியம் நிறுத்தம் இதெல்லாம் நம்மை காஞ்ச குதிரைக்கு புல்லும் அமிர்தம் னு மிரட்டி சேரவைப்பாங்க.

IIT, iisc போன்ற INI கல்வி நிறுவனங்கள் தபால் ABC உள்ள வந்தாலும் கோர்ஸ் கிரிடிட் நாங்க சொல்றது இருக்கனும்னு பேச்சு நடத்துறான். அப்ப IIT to IIT Transfer மட்டும்தான் நடக்கும்.
மொத்தத்தில் இந்த ABC நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வர்ரேன் நாம ஊதி ஊதி திங்கலாம்னு மொத்தமாவே நம்ம சிஸ்டத்தை சிதைக்கப்போகுது.

இப்ப வரை பெரிய கை யா இதுல காட்டப்பட்ட 20 நிறுவனத்துல 10 டீம்டு அப்ப இது யாருக்கான திட்டம்னு புரிஞ்சுக்க லாம். ஸ்டூடன்ட் மொபிலிட்டி ஜாஸ்தி பன்றேன்னு சொல்லி money mobility ஜாஸ்தி பன்னப்போறாங்க. அது மட்டும் நிஜம். இதுல இன்னும் நிறைய குளறுபடிகள் இருக்கு டிகிரில படிச்ச எல்லா கல்வி நிறுவனங்கள் பேரும் வருமா இல்லை கடைசியாக ரிஜிஸ்டர் பன்னது மட்டும் வருமா?

கிரிடிட் எதுக்காக ஸ்டூடன்ட் இந்த வெப்சைட்ல பதிவு பன்னனும்?
பார்டர் பாஸ்ல கிரிடிட் வாங்கிருந்தாலும் போதுமா?
மைக்ரேஷன் ரூல்ஸ் என்ன இது எதுவுமே இப்ப வரை தெளிவா சொல்லல.
மொத்தத்துல நீங்க படிச்சதாலதானேடா எங்களை கேள்வி கேட்குறீங்க இனி எப்படி படிக்குறீங்கனு பாக்குறோம்னு நேரடி சவால் தந்து அதை செஞ்சும் காட்டிடுச்சு ஒன்றியம். இனி ஒரு பெரிய துண்டா வாங்கி தலைல போத்திட்டு போய்ட்டாள் எல்லாரும்.

இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக நின்று இந்த மாதிரி சதித்திட்டங்களை எதிர்க்க ஒன்றினைந்து எதாவது பன்னனும். மனசு சுத்தமா கேட்கல.. அடுத்த தலைமுறை பசங்களை அவங்க கல்வி உரிமையை நினைச்சா இப்பவே பயமா இருக்கு.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *