Fri. Apr 19th, 2024

15வது ஐபிஎல் சீசன் 63 வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 41 (29) ரன்னும், படிக்கல் 39 (18) ரன்னும், சாம்சன் 32 (24) ரன்னும் அடித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. லக்னோ அணியில் தீபக் ஹூடா 59 (39) ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *