Thu. Oct 6th, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ஓன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிதம் “அஞ்சல் சேவை பிரிவு 2 துறைத் தேர்வுகள் 29.11.2020 இல் நடத்தப்பட்டது . மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தால் முதலில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னர் கேரள உயர்நீதி மன்றத்தால் நீக்கப்பட்டது . இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தாலும் ( எஸ்.எல்.பி 5030 / 2022 ) 04.03.2022 அன்று உறுதி செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள்ளாக அமலாக்குமாறு உத்தரவிடப்பட்டது . ஆனாலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை .

இதில் 2000 தேர்வர்கள் உள்ளனர் என்றும் , தேர்வு முடிவுகள் தாமதமாவதால் 100 அஞ்சல் மாவட்டங்களில் மக்கள் சேவை பாதிக்கப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது .

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் ஏன் தாமதம் ?”

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.