Fri. Mar 29th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 56 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 43 (24) ரன்னும், நிதிஷ் ராணா 43 (26) ரன்னும் இவர்களின் உதவியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை அணியில் இஷான் கிஷான் மட்டும் தன் பங்குக்கு 51 (43) ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *