Thu. Oct 6th, 2022

15 வது ஐபிஎல் சீசன் 54 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற பெங்களுர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய பெங்களுர் அணியில் கோஹ்லி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் வந்த கேப்டன் டு ப்ளசிஸ் 73 (50) மற்றும் ரஜத் படிடர் 48 (38) இணைந்து நல்ல ஸ்கோர் அடிக்க உதவினர். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் ராகுல் திரிபாதி 58 (37) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களுர் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹஸரங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெங்களுர் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.