Sat. Sep 24th, 2022

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்பதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்திய அரசின் அலுவல் மொழி என்ற மேலாண்மையை பயன்படுத்தி, இந்தி தான் தேசிய மொழி, இது இந்தியாவுக்குப் பொதுவான தொடர்பு மொழி என்ற பரப்பல் நடக்கிறது. உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்டு தமிழினம் என்றைக்கும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று. ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும்.இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்ட வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.