Tue. Sep 27th, 2022

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுச்சேரி ஜிப்மர் ” அலுவல் மொழி அமலாக்கம் ” பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது .

ஏப்ரல் 28 , 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் ( JIPMER ) இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது . இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது .

ஒரு சுற்றறிக்கை No / HC / OLI / 2022 அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு 3 ( 3 ) ஐ குறிப்பிட்டு அதன்படி பொது ஆணைகள் , அறிவிக்கைகள் , தீர்மானங்கள் , விதிகள் , நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள் , ஊடக செய்திகள் , ஒப்பந்தங்கள் , உடன்பாடுகள் , உரிமங்கள் , அனுமதிகள் , விலை கோரல் ( டெண்டார் ) மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது .

இரண்டாவது சுற்றறிக்கை No / OL imple / 2022 அதே தேதியில் வெளியிடப்பட்டுள்ளது . அதன் உள்ளடக்கம் அதிர்ச்சியை தருகிறது . அது சொல்வது என்ன ?

அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள் , பணி ஏடுகள் , பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள் , விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும் , ஆங்கிலத்திலும் எழுதப்படும் . எல்லா பதிவேடுகள் , பணி ஏடுகள் , பணிக் கணக்குகள் ஆகியவற்றில் எதிர்கால பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தியில் மட்டுமே செய்யப்படும் “

இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்தி பிரிவால் , நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளதாம் .

இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும் . சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது ” இந்தி மட்டும் ” என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது ?

என்னைப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு ” இந்தி செல் ” என்ற பெயரே சரியில்லை . அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் ” OLI Cell ” என்றுதான் இருந்திருக்க வேண்டும் . அக் குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கருதுகிறேன் . அந்த ” செல் ” சட்டத்தின் படியே செயல்பட வேண்டும் . ” இந்தி மட்டும் ” என்ற உறுதி மொழி , சட்ட நியதிகளை கடந்தது ஆகும் .

உண்மையில் , ஒன்றிய அரசின் துறை / நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில்தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் .

ஆகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No / OL imple / 2022 திரும்பப் பெற வேண்டும் .

உடனடியாக இத்தகைய நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் மரு . ராகேஷ் அகர்வால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் .”

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.