15வது ஐபிஎல் சீசன் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 56 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி ஓவரின் 4 வது பந்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 68 ரன்களை அடித்துள்ளார். ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hits: 7